Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷபம்: மார்கழி மாத ராசி பலன்கள்

Advertiesment
ரிஷபம்: மார்கழி மாத ராசி பலன்கள்
, புதன், 16 டிசம்பர் 2020 (13:49 IST)
(கிருத்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் கேது, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது  இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள்  சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.
 
 
தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன  வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய  ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம்  அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம் விட்டு பேசுவது கருத்து  வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும். 
 
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும். உடல் ஆரோக்கியம்  உண்டாகும். 
 
கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது  நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
 
கார்த்திகை:
இந்த மாதம் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.  
 
ரோகினி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது  நன்மைதரும். திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.  
 
மிருகசீரிஷம்:
இந்த மாதம் எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை  சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். 
அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 15, 16; ஜனவரி 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 5, 6.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேஷம்: மார்கழி மாத ராசி பலன்கள்