Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துலாம்: மார்கழி மாத ராசி பலன்கள்

Advertiesment
துலாம்: மார்கழி மாத ராசி பலன்கள்
கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது -  பாக்கிய  ஸ்தானத்தில் ராஹூ  -  லாப   ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
  
கிரக மாற்றங்கள்:
 
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
07-Jan-20 அன்று மாலை 4:25 மணிக்கு  புதபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-Jan-20 அன்று இரவு 8:22 மணிக்கு  சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
களத்திர காரகன் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது. 
 
குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். 
 
தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை  விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். 
 
உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை  உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். 
 
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை  உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது  வருமானமாகவும் மாறி பயன் தரும். 
 
பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று  மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு  உயரும். 
 
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும்  ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். 
 
சித்திரை 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.  மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாழுவது அவசியம். அக்கம்  பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.
 
சுவாதி:
 
இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம்  பலவழிகளிலும் செலவாகும்.
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
 
இந்த மாதம் காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும்.  வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்தில் இருக்கும் மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 31; ஜனவரி 1.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னி: மார்கழி மாத ராசி பலன்கள்