Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்மம்: மார்கழி மாத ராசி பலன்கள்

Advertiesment
சிம்மம்: மார்கழி மாத ராசி பலன்கள்
கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், குரு,  சனி, கேது  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரக மாற்றங்கள்:
 
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
07-Jan-20 அன்று மாலை 4:25 மணிக்கு  புதபகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-Jan-20 அன்று இரவு 8:22 மணிக்கு  சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி இந்த மாதம் இதுவரை இருந்த கடினமான  சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். 
 
குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய  அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.  மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு  வாய்ப்புகள் அதிகம். 
 
தொழில் செய்பவர்கள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். 
 
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்.
 
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து  பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச்  செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும். 
 
கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க  வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 
 
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். 
 
மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். 
 
மகம்:
 
இந்த மாதம் வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில்   தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. 
 
பூரம்:
 
இந்த மாதம் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத  வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்.  அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.  
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 26, 27.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடகம்: மார்கழி மாத ராசி பலன்கள்