Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிதுனம்: மாசி மாத ராசி பலன்கள்

Advertiesment
மிதுனம்: மாசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (15:16 IST)
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
 
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்கள்:
 
எந்த விசயத்திலும் நன்மை, தீமைகளை ஆராயாத மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும்.  வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
 
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். மேலிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.
 
பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.
 
அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.
 
மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
 
மிருகசீரீஷம் 3, 4: 
 
இந்த மாதம் பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை.
 
திருவாதிரை:
 
இந்த மாதம் உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.
 
புனர்பூசம் 1, 2, 3:
 
இந்த மாதம் பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 14, 15; மார்ச் 13.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷபம்: மாசி மாத ராசி பலன்கள்