Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷபம்: மாசி மாத ராசி பலன்கள்

Advertiesment
ரிஷபம்: மாசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (15:00 IST)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
 
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்கள்:
 
எடுக்கும் காரியங்களை தனது சாதுரிய பேச்சால் செயல்படுத்தும் ரிஷப ராசியினரே, இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும்.  உங்கள் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.
 
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.
 
குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும்  கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வழக்குகளில் உங்களுக்கு சாதகமில்லாத போக்கு ஏற்படலாம்.
 
பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும்.
 
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
 
மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம்  மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். 
 
ரோகிணி:
 
இந்த மாதம் மனகவலை குறையும். எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம்.  
 
மிருகசீரீஷம்:
 
இந்த மாதம்  எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 19, 20,
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 13; மார்ச் 11, 12.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேஷம்: மாசி மாத ராசி பலன்கள்