Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடகம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2022

Advertiesment
Kadagam
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:25 IST)
கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.


பலன்:
குடும்ப பாசத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் குணம் கொண்ட கடக ராசிக்காரர்களே, நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

பூசம்:
இந்த மாதம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். ராசிநாதன் சனி சந்திரனுடன் தொடர்பு கொள்ளும் அமைப்பு எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப் 09, 10
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 01, 02.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதுனம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2022