Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Advertiesment
கடகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:58 IST)
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய  ஸ்தானத்தில் புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண  ஸ்தானத்தில்  குரு, சனி - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
 
மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் எண்ணிய எண்ணம் ஈடேறும். யாராவது உங்கள் வேலைகளைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். வீரியத்தைக் குறைத்துக் கொண்டு காரியத்தை பெரிதாக எண்ணுங்கள். அனைவரையும் அரவணைத்துச் சென்று காரியங்களை நடத்துவீர்கள்.
 
பெண்களுக்கு  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
 
புனர் பூசம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.
 
பூசம்:
 
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை  தரும். கவனம் தேவை. 
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. 
 
பரிகாரம்: மாங்காடு காமாட்சி அம்மனை மனதார துதித்து வழிபடுங்கள். தடைகள் அகலும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 26, 27, 
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 19, 20, 21.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்