Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Advertiesment
மிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:42 IST)
கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் புதன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர  ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்பும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள்.  சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆனால் மனகுழப்பம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.
 
பெண்களுக்கு  உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள்  வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது  தாமதப்படும். 
 
திருவாதிரை: 
இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம்.  மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள்  சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
 
பரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 17, 18; நவம்பர் 14, 15.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷபம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்