Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுசு: மார்கழி மாத ராசி பலன்கள்

Advertiesment
தனுசு: மார்கழி மாத ராசி பலன்கள்
கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய  ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப  ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
 
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் ராசிக்கு மாறுகிறார். 
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
07-Jan-20 அன்று மாலை 4:25 மணிக்கு  புதபகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-Jan-20 அன்று இரவு 8:22 மணிக்கு  சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
தனகாரகன் குருவை நாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.  உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும்.  உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள். 
 
குடும்பத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக  இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் வரும்.
 
தொழில், வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச்  சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும்  எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். 
 
உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். 
 
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும்.  பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று  அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். 
 
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய  கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
 
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள்  பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்வீர்கள்.
 
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப்  பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். 
 
மூலம்:
 
இந்த மாதம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
 
பூராடம்:
 
இந்த மாதம் மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயம் அடைவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.  தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு  சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 4, 5, 6.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருச்சிகம்: மார்கழி மாத ராசி பலன்கள்