சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு தொடங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சந்திரமுகி படத்தின் பெருமபாலான காட்சிகளும் மைசூரில் உள்ள ஒரு அரண்மனையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.