விக்ரமின் வெறித்தனமான நடிப்பில் "கடாரம் கொண்டான்" டிரைலர்!

புதன், 3 ஜூலை 2019 (19:45 IST)
‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 
சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் இப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது. 
 
கமலின் தூங்காவனம் வெற்றி பட இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும்   
இப்படத்திற்கு  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளிவந்துள்ளது. 
 
எப்போதும் நடிப்பில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் விக்ரம் இந்த படத்திலும் தனக்கே உரித்தான மாஸான ஸ்டைலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வெறித்தனமாக நடித்துள்ளார். மேலும் கமலின் இளைய மகள் நடிகை அக்ஷரா ஹாசனின் நடிப்பு இப்படத்தில் நிச்சயம் பேசப்படும் அளவிற்கு உள்ளது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஸ்பைடர்மேனை இணையத்தில் ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி