காதல் புரட்சி செய்யும் விஜய் தேவரகொண்டா- டியர் காம்ரேட் தமிழ் ட்ரெய்லர்

வெள்ளி, 12 ஜூலை 2019 (17:39 IST)
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படமான “டியர் காம்ரேட்” படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது.

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி, நோட்டா, கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான “கீதா கோவிந்தம்” படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

அதைத்தொடர்ந்து இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் “டியர் காம்ரேட்” என்னும் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது இந்த படம். கீதா கோவிந்தம் படத்தில் இவருடன் நடித்த ராஷ்மிகா இந்த படத்திலும் காதலியாக நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காதல் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன். இந்த படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் நேற்று வெளியானதை தொடர்ந்து தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பட்டாம்பூச்சி பிடிக்க கற்றுத்தரும் சிங்களத்து சின்னக் குயில்..!