பிக்பாஸ் மீரா மிதுன் நடித்துள்ள "போத ஏறி புத்தி மாறி"டிரைலர்!

சனி, 6 ஜூலை 2019 (13:26 IST)
மாடல் அழகியான மீரா மிதுன்  தானா சேர்ந்த கூட்டம் மற்றும்  8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து தன்னை தமிழ் சினிமா உலகத்தில் அறிமுகம் செய்துகொண்டார். பின்னர் அவருக்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது. 
 

 
பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக நுழைந்த மீரா மிதுன்  ஆரம்பத்தில் அனைவரது வெறுப்புக்கும் ஆளானார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அவரை கார்னர் செய்தனர். பின்னர் அது தான் மீராவின் உண்மையான குணம் என்பதை தெரிந்துகொண்ட மக்கள் அவர்மீது தவறு இல்லை என்பதை புரிந்துகொண்டனர். 
 
இந்நிலையில் தற்போது அவரின் நடிப்பில் உருவாகியுள்ள "போத யேறி புத்தி மாறி" என்ற படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வெளியாகியுள்ளது.
 
கிராம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பல குறும்படங்களில் நடித்து பிரபலமான தீரஜ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒருவரை வெளியேற்ற இத்தனை ஓட்டுக்களா...? வாயடைத்து போன கமல் - ப்ரோமோ!