Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவரை வெளியேற்ற இத்தனை ஓட்டுக்களா...? வாயடைத்து போன கமல் - ப்ரோமோ!

Advertiesment
Bigg boss 3
, சனி, 6 ஜூலை 2019 (13:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 


 
பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வார இறுதி நாளில் இன்று கமல் ஹாசன் பங்கேற்றுள்ள ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. எவிக்ஷன் நாளான இன்று யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 
 
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் மோசமாக நடந்துகொண்ட போட்டியாளர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என மக்கள் தெரிவித்து வந்தனர். அதில் குறிப்பாக வனிதா, சாக்ஷி, அபிராமி , கவின், ஷெரின் உள்ளிட்டோர் நடத்தைகளில் மக்கள் அதிருப்தி அடைந்தனர் 
 
மேலும் எவிக்ஷன் லிஸ்டில் கவின் , பாத்திமா, சேரன் , சாக்ஷி, சரவணன் , மீரா , மதுமிதா, உள்ளிட்டோர் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். எனவே நாட்டாமை கமல் பஞ்சாயத்து செய்து இவர்களில் யாரை வெளியேற்றுவார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துண்டு துணியை சுற்றிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சுயஇன்ப காட்சி நடிகை!