Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணர்ச்சி ததும்ப முத்தக்காட்சி ! ரத்தக்களறி மிகுந்த ராம் கோபால் வர்மாவின் புதிய டிரைலர்..

Advertiesment
உணர்ச்சி ததும்ப முத்தக்காட்சி ! ரத்தக்களறி மிகுந்த ராம் கோபால் வர்மாவின் புதிய டிரைலர்..
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (14:23 IST)
தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் சிக்குபவர் ராம்கோபால் வர்மா. இவர் கவர்ச்சியான படங்களை எடுத்து பிரபலமானவர். இவரது படங்களின் போஸ்டர்கள் , டிரைலர்கள் படு சூடாக இருக்கும்.

 
தற்போது பைரவா கீதா என்ற படத்தை தயாரித்துள்ளார். சித்தார்த்தா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலரை வர்மா வெளியிட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் உயர்மட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை பல எதிர்ப்புகளை கடந்து திருமண செய்துகொள்வது தான் கதை.
 
இந்த டிரைலரை பார்க்கும்போது படத்தில் பல வன்முறை காட்சிகளும்  இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை சித்தார்த்தா தத்தோலு இயக்கியுள்ளார்.
 
தனஞ்ஜெயா, இரா மோர்  ஆகியோர் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னத்திடமிருந்து வந்துள்ள முக்கியமான அறிவிப்பு