ராம்கோபால் வர்மா மற்றும் ஆபாச பட நடிகை கைதாக வாய்ப்பு

திங்கள், 29 ஜனவரி 2018 (16:02 IST)
ஆபாச பட நடிகையை வைத்து ராம் கோபால் வர்மா படம் இயக்கியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக செய்தி பரவி வருகிறது.

 
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சையான கருத்து தெரிவிப்பது வழக்கம். இவரது கருத்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடும். அண்மையில் இவர் ஆபாச பட நடிகையை வைத்து படம் இயக்கியது பெரும் சர்ச்சையானது.
 
அந்த திரைப்படத்தை இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகை மியா மால்கோவா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐதராபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அறந்தாங்கி நிஷாவாவை கதாநாயகி ஆக்கப்போகிறாரா தனுஷ்?