Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

Dhanush dance

Raj Kumar

, செவ்வாய், 21 மே 2024 (09:29 IST)
சினிமாவில் அறிமுக நாயகனாக வந்தப்போது அதிக விமர்சனத்துக்கு உள்ளானவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்களுக்கு குறைவாகவே வரவேற்புகள் கிடைத்தன. மேலும் அவரது தோற்றம் ஒரு கதாநாயகனின் தோற்றம் போல இல்லை என பலரும் நினைத்தனர்.



ஆனால் தனுஷ் தனது நடிப்பின் மூலம் தோற்றத்திற்கும் நடிப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என நிருபித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் தனுஷ், அதே போல ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் அவர் முதன் முதலாக நடித்த நடித்த படம் ராஞ்சனா. இதில் நடராஜன் கேமிராமேனாக பணிப்புரிந்தார். இந்த திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்கிற பெயரில் வெளியானது. இந்த திரைப்படம் குறித்து நடராஜன் கூறும்போது, ”இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் டீ கடையில் வைத்து கதாநாயகி தனுஷை அடித்துவிட்டு சென்றுவிடுவார்.

webdunia


அந்த சமயத்தில் டீ கடையில் ஓடும் ஒரு பாடலை கேட்டுவிட்டு அதற்கு தகுந்தாற் போல தனுஷ் டான்ஸ் ஆட வேண்டும். இந்த காட்சியானது காசியில் படம்பிடிக்கப்பட்டது. தனுஷிற்கு ஏற்கனவே எப்படி ஆட வேண்டும் என்றெல்லாம் சொல்லி தரப்படவில்லை.

இருந்தாலும் அந்த காட்சியில் மிக பிரமாதமாக ஆடினார். அவர் நடனம் ஆடுவதை பார்த்த அங்கிருந்த 6000க்கும் மேற்ப்பட்ட வட இந்தியர்கள் அதற்காக கை தட்டினர். தோணி க்ரவுண்டில் இறங்கும்போது எப்படி ஒரு சத்தம் கேட்குமோ அந்த அளவிற்கு அன்று சத்தம் கேட்டது” என்கிறார் நடராஜன்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!