Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான சீக்ரெட்!

Advertiesment
Surya may act as a physically challenged person in bala movie
, வெள்ளி, 4 மார்ச் 2022 (11:10 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்துவரும்.மார்ச் மாதம் 18 ஆம் தேதி படப்பிடிப்பு மதுரையில் தொடங்குகிறது. மூன்றே மாதத்தில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் சுர்யாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யா ஒரு மாற்றுத்திறனாளியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கேட்கும் திறன் அற்ற் வாய் பேசாத முடியாதவராக இந்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் விஷால் மாறுகண் கொண்டவராக நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தகக்து.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் செம்ம அப்டேட்… கடைசி விவசாயி ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!