Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் செம்ம அப்டேட்… கடைசி விவசாயி ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!

தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் செம்ம அப்டேட்… கடைசி விவசாயி ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!
, வெள்ளி, 4 மார்ச் 2022 (11:09 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியவர்கள் நடிப்பில் உருவான கடைசி விவசாயி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குனர் மணிகண்டன் ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார்.

கடந்த மாதம் வெளியான திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் கூட இணையத்தில் அதிகமான பரவின. இந்நிலையில் இந்த படத்தை வாங்கியுள்ள சோனி லிவ் ஓடிடி நிறுவனம் மார்ச் 11 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி நடிப்பில் உருவாகும் “மாமன்னன்”! – முதன்முறையாக இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்!