Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுசி கணேசன் என்னை அசிங்கமாகத் திட்டியபோது... அவரது மனைவி சிரிச்சாங்க

Advertiesment
சுசி கணேசன் என்னை அசிங்கமாகத் திட்டியபோது... அவரது மனைவி சிரிச்சாங்க
, வியாழன், 25 அக்டோபர் 2018 (14:39 IST)
கவிஞர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது மீடூ புகார் கூறியிருந்தார். இந்நிலையில் லீனாவுக்கு ஆதரவாக நடிகை அமலா பால் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.   
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது:  " சுசி கணேசனால் நான்  பல சங்கடங்களை  சந்திக்க நேர்ந்தது. எனவே எனக்கு நேர்ந்த நிலையை வைத்தே, லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது" என்று அந்த ட்விட்டர் பதிவில் அமலாபால் கூறி இருந்தார். இதற்கு லீனா மணிமேகலை நன்றி தெரிவித்து அவருக்குப் பதில் அளித்திருந்தார்,
 
இந்த நிலையில், சுசி கணேசன் தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டியதாக மீண்டும் ஒரு பதிவைப் அமலாபால் போட்டிருக்கிறார். அவரது மற்றொரு பதிவில் ``என் வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் தற்போது நடந்திருக்கிறது. சற்று முன்னர் இயக்குநர் சுசி கணேசனும், அவரின் மனைவி மஞ்சரியும் என்னைத் தொடர்புகொண்டார்கள். என்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்காக நான் அந்த அழைப்புக்குப் பதிலளித்தேன். அவர் மனைவிக்கு நான் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும்போதே போனைப் பிடுங்கிய சுசி கணேசன் என்னை அசிங்கமாகத் திட்டத் தொடங்கினார். நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரின் மனைவி சிரிப்பது எனக்கு கேட்டது. பின்னர் இருவரும் என்னைத் தரக்குறைவாகப் பேசினார்கள். என்னைப் பயமுறுத்த நினைக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவிடம் ஆசி பெற்ற கார்த்திக் ராஜா