Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரேநாளில் ரூ.8 கோடி வசூலித்த ‘தி கேரளா ஸ்டோரி’: நாடு முழுவதும் நல்ல வரவேற்பு..!

Advertiesment
ஒரேநாளில் ரூ.8 கோடி வசூலித்த ‘தி கேரளா ஸ்டோரி’: நாடு முழுவதும் நல்ல வரவேற்பு..!
, ஞாயிறு, 7 மே 2023 (12:30 IST)
‘தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கேரள மாநில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரே நாளில் ரூபாய் 8 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகம் மற்றும் கேரளா இரண்டு மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்றும் இந்த படம் அனைத்து மாநில மக்களாலும் ரசித்து பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
குறிப்பாக வட இந்தியாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் சர்ச்சைக்குரிய கதையாக இருந்தாலும் கேரளாவில் உள்ள திரையரங்குகளில் கூட இந்த படம் வசூலில் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் இன்று முதல் தமிழகத்தில் மட்டும் இந்த படம் போதிய வரவேற்பு இல்லை என்று நிறுத்தப்பட்டதாக தியேட்டர் அதிபர்களால் காரணம் சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளரா பிரதமர் மோடி? திருமாவளவன் கேள்வி..!