Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் நீக்கம் – ஜி தமிழ் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (08:17 IST)
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி தொடரின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக ஜி தமிழ் அறிவித்துள்ளது.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷப்னம் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக இதில் இருந்து கார்த்திக் ராஜ் விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

இதை இப்போது ஜி தமிழ் நிறுவனமே டிவிட்டரில் உறுதி செய்துள்ளது.  அதில் ‘செம்பருத்தி தொடரின் வெற்றிக்காக கார்த்திக்கின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் எதிர்காலத்தில் கார்த்திக்கோடு இணைந்து ஜி தமிழ் பணியாற்றும்’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments