வலிமை அப்டேட் கேட்டு கேட்டு சோர்ந்து போன அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இசையமைப்பாளர் யுவனின் பதில்
நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.
ஒவ்வொரு நல்ல நாளிலும் இன்று வலிமை அப்டேட் வரதா என எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் அப்டேட் வெளியிட சொல்லி பேனர் வைக்கு லெவலிலும் இறங்கினார்கள். இவ்வளவு செய்தும் வலிமை படக்குழுவிடமிருந்து அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என்ற அப்டேட் மட்டுமே வந்தது.
இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும் அஜித் ரசிகர்கள் மொய்க்க தொடங்கியுள்ளனர். யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் அப்டேட் பற்றி கேட்க, புத்தாண்டுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் பதிலளித்துள்ளதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிய நிலையில் புத்தாண்டுக்கு அப்டேட் வருவதாகவே அஜித் ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்க தொடங்கியுள்ளனர். அந்த அப்டேட் மோஷன் போஸ்ட்ராகவோ அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.