Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா!!

Advertiesment
super singer
, செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (18:21 IST)

விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது.

 

முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர்.

 

 

அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது.

 

 

தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

 

வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

 

பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

 

சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் கூட்டணி: இசையமைப்பாளர் இந்த பிரபலமா?