Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை படத்துக்காக யுவன் ரெக்கார்ட் செய்த பாடல் – விரைவில் படப்பிடிப்பு!

வலிமை படத்துக்காக யுவன் ரெக்கார்ட் செய்த பாடல் – விரைவில் படப்பிடிப்பு!
, புதன், 23 டிசம்பர் 2020 (17:09 IST)
வலிமை படத்துக்காக யுவன் ஒரு பாடலை இன்று ரெக்கார்ட் செய்து மிக்ஸ் செய்துள்ளாராம்.

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.

ஒவ்வொரு நல்ல நாளிலும் இன்று வலிமை அப்டேட் வரதா என எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் அப்டேட் வெளியிட சொல்லி பேனர் வைக்கு லெவலிலும் இறங்கினார்கள். இவ்வளவு செய்தும் வலிமை படக்குழுவிடமிருந்து ‘அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்’ என்ற அப்டேட் மட்டுமே வந்தது. இதனால் இப்போது ரசிகர்கள் வலிமைப் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் அப்டேட் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இப்போது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. யுவன் வலிமை படத்துக்காக இன்று ஒரு பாடலை ரெக்கார்ட் செய்து அதை மிக்ஸ் செய்துள்ளாராம். இந்த பாடல் அடுத்த கட்ட படப்பிடிப்பில் படம்பிடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறதா மாஸ்டர்? அதிர்ச்சி செய்தி!