Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவன் படத்துக்கு யுவன் இசை இல்லையா? கடுப்பான ரசிகர்கள்!

செல்வராகவன் படத்துக்கு யுவன் இசை இல்லையா? கடுப்பான ரசிகர்கள்!
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (17:04 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். பல செல்போன்களிலும் யுவன் + செல்வராகவன் என கண்டிப்பாக ஒரு பிளே லிஸ்ட் இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. செல்வராகவனும் ஜி வி பிரகாஷ், ஹேரிஸ் ஜெயராஜ் என ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் மீண்டும் யுவனுடனேயே கூட்டணி அமைத்தார்.

அவர்கள் கூட்டணியில் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் என் ஜி கே படப்பாடல்கள் உருவாகின. இணையத்தில் மிகப்பெரிய ஹிட்டாகின. இந்நிலையில் இப்போது செல்வராகவன் தனுஷை வைத்து இயக்க உள்ள புதிய படத்துக்கு யுவன் இசை இல்லையாம். அவருக்குப் பதிலாக ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்ய சொல்லியுள்ளாரம் தனுஷ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை வருடமாக உங்களை எப்படி வச்சு செஞ்சதுன்னு புரியுது – வெங்கட் பிரபுவின் டிவீட்!