நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாயிடும்: சூர்யாவின் #NGKTeaser

வியாழன், 14 பிப்ரவரி 2019 (11:19 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்துள்ள என்ஜிகே டீசர் வெளியாகி உள்ளது. 
காதலர் தினத்தை முன்னிட்டு  என்ஜிகே படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முழு அரசியல் படமான என்ஜிகேவில் சூர்யா நந்த கோபலான் குமாரன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவரது வேடம் அரசியல் வாதி வேடம்.

நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாயிடும்  என சாய்பல்லவி டீசரில் சூர்யாவை பார்த்து சொல்கிறார். இந்த டீசர் நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் தான்.
 


இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர்  சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு இளவரசு, மற்றும் ராம்குமார் கணேசன் ஆகியோர் முக்கிய  வேடத்தில்  நடித்துள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 'தேவ்' திரைவிமர்சனம்