Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தேவ்' திரைவிமர்சனம்

'தேவ்' திரைவிமர்சனம்
, வியாழன், 14 பிப்ரவரி 2019 (10:41 IST)
கார்த்தி, ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் 'தேவ் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
போட்டோகிராபி தொழில், இந்தியா முழுவதும் கவலையின்றி சுற்றி ஜாலியாக வாழும் வாழ்க்கை, பணத்திற்காக வாழாமல் மன திருப்திக்காக வாழும்  கேரக்டரில் கார்த்தி. தன்னையும் தாயையும் தவிக்க விட்டு சென்ற தந்தையால் ஆண்கள் என்றாலே வெறுப்புடனும், அதே நேரத்தில் பணம், பணம் என்ற கொள்கையுடனும் கறாருடன் கூடிய திமிருடன் வாழும் கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங். இந்த மாறுபட்ட கேரக்டர்களை கொண்ட இருவருக்கும் உண்டாகும் காதல், அதன்பின் ஏற்படும் மோதல் இதுதான் 'தேவ்' படத்தின் கதை
 
'பையா' படத்திற்கு பின் முழு நீள ரொமான்ஸ் படத்தில் நடித்துள்ள கார்த்தி, தனது கேரக்டரை தூக்கி நிறுத்துவதில் வெற்றி பெறுகிறார். ரகுலை பார்த்தவுடன் காதலித்தாலும், ரகுலின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் மனம் மாறும் வரை பொறுமை காக்கும் டீசண்ட் காதலை வெளிப்படுத்தியுள்ளார். பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் சுறுசுறுப்பு மற்றும் இளமை பிளஸ்
 
ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற கருத்தை மனதில் ஆழப்பதிய வைத்துள்ள கேரக்டரில் ரகுல் சிறப்பாக நடித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கார்த்தியின் காதலில் விழும் நடிப்பை ரகுல் தனது முகத்தில் காட்டியிருக்கும் பாவனைகள் சூப்பர். ஏற்கனவே இவர் தமிழில் நடித்த இரண்டு படங்களிலும் ஹீரோவுடன் டூயட் மட்டுமே பாடியிருந்த நிலையில் இந்த படத்தில் கிடைத்த அழுத்தமான கேரக்டரை சரியாக பயன்படுத்தியுள்ளார்.
 
webdunia
ஆர்ஜே விக்னேஸ் காமெடி நடிப்பு ரொம்ப சுமார். ஒரு காட்சியில் கூட சிரிப்பு வரவில்லை. அதேபோல் தான் அம்ருதா ஏனோ தானோ என்று நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் கேரக்டர்களுக்கு இந்த படத்தில் முக்கியத்துவமே இல்லை. எப்படி இந்த கேரக்டர்களில் நடிக்க இரண்டு சீனியர் நட்சத்திரங்களும் ஒப்புக்கொண்டார்கள் என்று தெரியவில்லை
 
ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் மட்டும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். சரியான இடைவெளியில் பாடல்கள் மற்றும் அருமையான ரொமான்ஸ் கதைக்கேற்ற பின்னணி இசை சூப்பர். வேல்ராஜின் ஒளிப்பதிவு உலகத்தரம். ரூபனின் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் ரொம்ப சுமார்
 
இயக்குனர் ரஜத் ரவிசங்கரின் திரைக்கதையில் இதற்கு முன் வெளியான பல ரொமான்ஸ் படங்களை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பக பையா, காற்று வெளியிடை ஆகிய இரண்டு படங்களின் பாதிப்பு அதிகம். இரண்டு மாறுபட்ட கேரக்டர்களின் காதலை சொல்ல வந்த இயக்குனரின் நோக்கம் புதுமையாக இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் ஊடல் காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்ததாக உள்ளது. காதலர்களுக்கு இடையே ஒரு செயற்கையான சண்டையை ஏற்படுத்தி, படம் எப்போது முடியும்? என்று பார்வையாளர்களை நெளிய வைக்கின்றார் இயக்குனர்.
 
கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பு, ஹாரீஸ் ஜெயராஜ் இசைக்காக ஒருமுறை பார்க்கலாம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னல் வேகத்தில் அஜித் 59 படப்பிடிப்பு – அஜித் எப்போது ?