இயக்குனர் ஹெச் வினோத் நடிப்பில் அஜித் மற்றும் கார்த்திகேயா நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 24 ஆம் தேதி அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. படம் வெளியாகி வசூலில் நல்ல வேட்டை நடத்தினாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெறவில்லை. தேவையில்லாத குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள், படத்தின் நீளம் ஆகியவை பெறும் குறையாக சொல்லப்பட்டது. அதனால் சில நாட்களில் படத்தில் இருந்து 14 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கியது.
இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபு நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் அவர் சம்மந்தமானக் காட்சிகள் எதுவும் இல்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதுபற்றிய ஒரு தகவல் இப்போது சொல்லப்படுகிறது. படத்தில் யோகி பாபு நடித்த காட்சிகள் நீளம் காரணமாக நீக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பதிலாக அவர் அஜித் அடுத்து நடித்து வினோத் இயக்கும் படத்தில் முக்கியமான மற்றும் நீளமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.