Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவா மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகும் சலூன் – கவனத்தை ஈர்த்த போஸ்டர்!

சிவா மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகும் சலூன் – கவனத்தை ஈர்த்த போஸ்டர்!
, சனி, 14 நவம்பர் 2020 (13:11 IST)
தர்மபிரபு படத்தை இயக்கிய முத்துகுமரன் இயக்கத்தில் சிவா மற்றும் யோகி பாபு நடிக்கும் சலூன் என்ற படத்தின் முதல் லுக் பார்வை வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதைய சூழ்நிலையில் காமெடியில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. எமதர்மன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ராதா ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, ரேகா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை முத்துகுமரன் இயக்கியிருந்தார். இந்த திரைப்பயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து இப்போது அதே கூட்டணியில் சலூன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சிவாவும் யோகி பாபுவும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர். இதையடுத்து இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் ’’மூக்குத்தி அம்மன்’’ திரைப்படம் டுவிட்டர் விமர்சனம்!