இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி, இந்தியாவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது இதுவே முதல்முறை.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வரும் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை புலிவேஷம் அணிந்து வந்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் ரசிகரான டைகர் ராபியை சிலர் தாக்கியுள்ளனர். அவர் சி பிளாக்கில் இருந்து வங்கதேசக் கொடியை ஆட்டியபடி, வங்கதேச அணிக்கு ஆதரவாக சில கோஷங்களை எழுப்பியுள்ளார்.
இதையடுத்து அவரோடு சில ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் கையில் வைத்திருந்த வங்கதேசக் கொடியை பிடுங்கி எறிந்துவிட்டு அவரைத் தாக்கியுள்ளனர். அவரை போலீஸார் கும்பலிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.