இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நிறைய விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்படுகின்றன.
இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு அபரிமிதமான வரவேற்பும் பாரட்டுகளும் கிடைத்தன. அதையடுத்து பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியகியுள்ளது. படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளரின் மற்றொரு படமான வணங்கான் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.