இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே வணங்கான் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணங்கான் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் டிசம்பர் 18 ஆம் தேதி நடக்கவுள்ளது. இயக்குனர் பாலா சினிமாத் துறைக்குள் வந்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து அதை ஒரு கொண்டாட்ட நிகழ்வாகக் கொண்டாட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.