Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தில்லான தாதா சாருஹாசன்! - இந்திய சினிமாவின் ஒரு புதிய முயற்சி!

Advertiesment
Dha Dha 87
, புதன், 27 பிப்ரவரி 2019 (12:46 IST)
தமிழ் சினிமாவின் புது அத்தியாய திருப்பமாக பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் தாதா 87 திரைப்படம்  ஒரு புது முயற்சியாக பார்க்கப்படுகிறது. 


 
உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா 87  திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
 
"ஏஜிங் சூப்பர் ஸ்டார்"  என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கிறார். மேலும் ஜனகராஜ், மனோஜ்குமார், ஆனந்த்பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா உள்ளிட்டோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
படம் வருகிற மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடூவால் டேமேஜ் ஆன பெயர்; வைரமுத்து செய்த வேலை; கிண்டலடிக்கும் சின்மயி