Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘யாஷ் 19’ படத்தின் அறிவிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

‘யாஷ் 19’ படத்தின் அறிவிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, புதன், 1 ஜூன் 2022 (15:51 IST)
கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யாஷின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. யாஷின் அடுத்த படத்தை ‘மஃப்டி’ படத்தின் இயக்குனர் நர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நர்தன் இயக்கிய மஃப்டி திரைப்படம்தான் தற்போது சிம்பு நடிப்பில் பத்துதல என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. முதலில் இந்த படத்தை இயக்கவும் நர்தன் தான் ஒப்பந்தம் ஆனார். ஆனால் பின்னர் அவர் வெளியேற தற்போது கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

கேஜிஎஃப் 2 படத்தின் 50 ஆவது நாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று ‘யாஷ் 19’ படமான புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகர் கே கே பாடிய கடைசி தமிழ்ப் பாடல்… வீடியோவைப் பகிர்ந்த இயக்குனர்கள்!