Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனை சந்தித்த யானை படக்குழு… புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசனை சந்தித்த யானை படக்குழு… புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, திங்கள், 13 ஜூன் 2022 (17:31 IST)
யானை படம் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார். இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யானை படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் “விக்ரம் படத்தின் மீதான மரியாதை காரணமாக நாங்கள் யானை ரிலீஸை ஜூலை 1 ஆம் தேதி தள்ளிவைக்கிறோம். கமல் சாருக்கும் இயக்குனர் லோகேஷுக்கும் யானை படக்குழு சார்பாக வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்ற முயலும் பிரபல தொலைக்காட்சி!