Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாளத்தில் டப் ஆகி ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்… வெளியான தகவல்!

மலையாளத்தில் டப் ஆகி ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்… வெளியான தகவல்!
, சனி, 11 ஜூன் 2022 (09:45 IST)
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் மலையாளத்தில் டப் ஆகி ரிலீஸாகிறது. இது சம்மந்தமான போஸ்டர்களை விநியோகஸ்தர் RK சுரேஷ் தற்போது பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இயக்குனர் ஆகும் பிருத்விராஜ்… KGF நிறுவனத்தோடு பிரம்மாண்ட கூட்டணி… வெளியான First look