Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சிற்றம்பலம் போலவே இருக்கும்… மாதவன் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட எழுத்தாளர்

திருச்சிற்றம்பலம் போலவே இருக்கும்… மாதவன் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட எழுத்தாளர்
, புதன், 1 மார்ச் 2023 (08:20 IST)
நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மித்ரன் அடுத்து நடிகர் மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக மித்ரன் சொன்ன கதையில் திருப்தி அடையாத மாதவன், இப்போது ஜெயமோகனின் கதையைப் படமாக்கலாம் என்று மித்ரனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் “இந்த படமும் இயக்குனர் மித்ரனின் முந்தைய படம் போலவே நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசேதான் கடவுளடா படத்தை இப்போது ரிலீஸ் செய்யமாட்டோம்… நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் பதில்!