எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. வடக்கன் என்று பெயரிடப்பட்டுள்ள் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை இயக்குனர் சுசீந்திரன் தொடங்கி வைத்துள்ளார்.
சமீபகாலமாக வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்வது சம்மந்தமாக இருவேறு விதமான கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் படத்தின் தலைப்பே வடக்கன் என இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை டிஸ்கவரி சினிமா என்ற நிறுவனத்தின் மூலமாக வேடியப்பன் தயாரிக்கிறார்.