Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் தீபிகா படுகோன் முதலிடம்!

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் தீபிகா படுகோன்  முதலிடம்!
, வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:40 IST)
இந்தி நடிகை தீபிகா படுகோனுக்கு ரூ.18 கோடி சம்பளம் என்ற தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். இவர், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுன் இணைந்து ஓம் சாந்தி ஓம், பில்லு பார்பர், பத்மாவத், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கோச்சடையான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், இவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோருடன் இணைந்து நடித்த பதான் படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட் சினிமாவுக்கு  நம்பிக்கை அளித்துள்ளது.

இந்த நிலையில்,பதான் பட ஹிட்டை அடுத்து, தீபிகா படுகோனின் சம்பளமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த  நிலையில், தெலுங்கு இயக்குனர், நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில், தீபிகா படுகோனுக்கு ரூ. 18 சம்பளம் என்ற தகவல் வெளியாகிறது.

இப்படத்தில், அமிதாப் பச்சன், பிரபாஸ், திஷா பதானி ஆகியோரும் நடிக்கின்றனர்.
ரூ.500 கோடியில் தயாராகும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் நடிகைகளில் தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொறச்சு வேனாலும் கொடுங்க ஆனா மொத்தமா குடுங்க- சந்தானத்தின் சம்பள பாலிசி இதுதானாம்!