Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவால் விட்ட பிரபல நடிகையை தூக்கிப்போட்டு குமுறிய மல்யுத்த வீராங்கணை

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:47 IST)
சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனையுடன் மோதி அடி வாங்கி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் டபுள்யூ டபுள்யூ இ வீரர் தி கிரேட் காளியின் மல்யுத்த அகாடமியான சிடபுள்யூஇ மல்யுத்த போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த போட்டியின் துவக்க நாளில் மேடையில் நடனம் ஆட ராக்கி சாவந்த் அழைக்கப்பட்டார்.
 
 ராக்கி சாவந்த் டான்ஸ் ஆடிவிட்டு பெண்கள் மோதிக் கொண்ட மல்யுத்த போட்டியை கண்டு ரசித்து கொண்டிருந்தார். அப்போது ரொபல் என்ற வீராங்கனை தன்னை எதிர்த்து மோதியவர்களை தாக்கி வெற்றி பெற்றார். 
 
அதை பார்த்த ராக்கி ரொபலை தன்னுடன் மோதுமாறு சவால் விட்டு  மேடைக்கு சென்றார்.  சென்ற வேகத்திலே அவரை ரொபல் தூக்கிப் போட்டி நாக் அவுட் செய்துவிட்டார் 
 
ரொபல் தாக்கியதில் ராக்கி சாவந்த் களத்திலே மயக்கம் அடைந்துவிட்டார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
இந்த காயத்தால் தலை மற்றும் இடுப்பு வலிப்பதாக ராக்கி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அடி வாங்கிய காயம் கூட ஆறாத நிலையில்,  தற்போது இது நடிகை தனுஸ்ரீ தத்தாவின் சதி வேலை என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 
ராக்கி நாக் அவுட் ஆன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments