தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வசூலை குவித்து வருகிறது. இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டாலும், அந்த தொகையை பலர் நம்ப தயாராக இல்லை. இருப்பினும் இதுவொரு வெற்றிப்படம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தில் வேட்டி சட்டையில் கலக்கும் அஜித்தை, பிரபல வேட்டி நிறுவனம் ஒன்று அஜித்தை அணுகி தங்களது பிராண்ட் விளம்பர படத்தில் நடிக்குமாறும், ஒரே ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் தர தயார் என்றும் கூறினார்களாம். ஆனால் ஆரம்பகாலத்தில் ஒருசில விளம்பர படத்தில் நடித்த அஜித், இனிமேல் விளம்பர படத்தில் நடிக்க போவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருப்பதாக கூறி மறுத்துவிட்டாராம
பணத்திற்காக விளம்பர படத்தில் நடித்துவிட்டு அந்த பணத்தை சமூக் சேவைக்காக கொடுத்துவிடுவதாக ஏமாற்று வேலை செய்யும் நடிகர்கள் மத்தியில் ஒரு கோடி கொடுத்தாலும் விளம்பர படத்தில் நடிக்க விரும்பாத அஜித்தை ஏன் 'தல' என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள் என்பது தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்