மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால் வன்முறை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.
நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல், மணிப்பூர் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க அம்மாநில டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக 77 நாட்களுக்கு பிறகு ஹீராதாஸ் என்ற முக்கிய குற்றவாளியைக் கைது செய்து, அவரது புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த அ நீதியைக் கண்டித்து, சென்னை மெரீனாவில் இன்று அமைதியின் இன்றுகூடல் நடைபெறுகிறது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தன் டுவிட்டர் பக்கத்தில்,
மணிப்பூர் குக்கி பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம் கொடுமையிலும் கொடுமை..
பெண்களின்
மதிப்பை
கெடுக்கும் இழிவான கொடுஞ்செயல்
இதனை கடுமையாக தண்டிக்காவிட்டால்
தொடரும்
ஆண் பெண் சமத்துவத்தை
சிதையிடும்
கண்டனம்
என் கடுமையான
எதிர்ப்பு என்று பதிவிட்டுள்ளார்.