மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டாவை நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரணை.. மகளிர் ஆணையத்தின் புதிய உத்தரவு..

Siva
புதன், 29 அக்டோபர் 2025 (10:49 IST)
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த திருமண மோசடி மற்றும் பாலியல் புகார்கள் தொடர்பாக, சென்னை மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது.
 
ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். மகளிர் ஆணையத்தில் இருவரும் நேருக்கு நேர் அமரவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
 
தனது புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததற்கு 'அரசியல் தலையீடு' தான் காரணம் என்று ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நவம்பர் 1ஆம் தேதி ஆஜராகுமாறு இருவருக்கும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இதற்கிடையே, ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, சட்டப்படி உரிமை கோருவதில் உறுதியாக இருப்பதாக மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு அரக்கன் தர்பீஸை பீஸ் போட்ட வினோத்! மீண்டும் மெய்யழகன் காம்போ! - Biggboss Season 9 Promo!

பிறமொழி நடிகர்களை நடிக்கவைத்தால் பேன் இந்தியா படம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்… விஷ்ணு விஷால் கருத்து!

பாகுபலி 3 வரும்… ஆனா எந்த வடிவத்தில் தெரியுமா?

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டாவை நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரணை.. மகளிர் ஆணையத்தின் புதிய உத்தரவு..

கேரளாவில் பாய்ச்சல்… ஆந்திராவில் பதுங்கல்… வெளிமாநிலங்களில் பைசன் நிலவரம்!

அடுத்த கட்டுரையில்