விஜய்க்காக லோகேஷ் அடுத்து எழுதும் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இப்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். விஜய்யும் நெல்சன் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 66 ஆவது படத்தை அவர் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக விக்ரம்மை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக எப்போதும் வில்லன் கதாபாத்திரத்தை வலுவாக அமைப்பதில் முனைப்புக் காட்டுவார். அதனால் மாஸ்டரில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது போல, விக்ரம்மை அடுத்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என சொல்லப்படுகிறது.