இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்க இருக்கும் ஆத்தா திரைப்படத்தில் இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை இணைந்து கொடுத்த இளையராஜாவும் வைரமுத்துவும் ஒரு கட்டத்தில் பிரிந்தார்கள். ஆனால் அதன் பின்னர் தற்போது 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்கள் மீண்டும் இணையவில்லை. அவர்கள் மீண்டும் ஒரு படத்திலாவது இணைந்துவிட மாட்டார்களா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இருக்கும் கலைஞர்களே ஆவலாக காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பாரதிராஜா தனது கடைசி படமாக ஆத்தா எனும் படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்துக்காக தன்னுடைய நண்பரான இளையராஜாவை இசையமைக்க வைக்க இருக்கிறார். இதற்கிடையில் பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து தானும் அந்த படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதனால் எப்படியாவது பாரதிராஜா அதை நிறைவேற்ற முயற்சி செய்வார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜாவும் இருவரையும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.