Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவரசா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தானாம் – அடித்தது ஜாக்பாட்!

Advertiesment
நவரசா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தானாம் – அடித்தது ஜாக்பாட்!
, வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:11 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஆந்தாலஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைப் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில அவர் குறுகிய இடைவெளியில் குறைந்த பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.  அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஒரு புராணத்தொடரை உருவாக்க இருக்கிறார். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்த கதைகளில் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அந்த பகுதிகளின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் சில நாட்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மேலும் ஒரு தகவலாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பிசாசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பிரயாகா மார்ட்டின் தான் இந்த படத்தில் கதாநாயகியாம்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னதான் சோகத்தில் இருந்தாலும் தளபதி 65 படக்குழுவை வாழ்த்திய தமன்!