Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு ரஜினிக்கு அழைப்பு.. சூர்யாவுக்காக வருவாரா?

vinoth
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (09:22 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள ரஜினிகாந்தை படக்குழு அழைதுள்ளார்களாம். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

இந்த பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் கிடையாது… விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

நடிப்பு அரக்கன்கள் ஃபஹத் &எஸ் ஜே சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதா?!

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments