Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்களே இயக்கிக் கொடுங்கள்… கார்த்திக் நரேனிடம் கோரிக்கை வைத்த பாலிவுட் ஹீரோ!

நீங்களே இயக்கிக் கொடுங்கள்… கார்த்திக் நரேனிடம் கோரிக்கை வைத்த பாலிவுட் ஹீரோ!
, வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:49 IST)
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் துருவங்கள் பதினாறு படத்தை கார்த்திக் நரேனே இயக்க வேண்டும் என கதாநாயகன் வருண் தவான் கேட்டுள்ளாராம்.

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்கள் பல ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். மாநகரம் உள்பட பல படங்களை தற்போது ரீமேக் ஆகி வரும் நிலையில் மேலும் ஒரு சூப்பர் ஹிட் தமிழ் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’துருவங்கள் பதினாறு’. இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த படத்தில் கதாநாயகனாக வருண் தவான் நடிக்கும் நிலையில் படத்தை தமிழில் இயக்கிய கார்த்திக் நரேனே இயக்கினால் சிறப்பாக இருக்கும் என  அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியுள்ளாராம். ஆனால் கார்த்திக் நரேன் இப்போது தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருவதால் என்ன முடிவெடுப்பார் எனத் தெரியவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதிராஜாவுக்கு கேட்ட விருது ரஜினிக்கு கிடைத்திருக்கிறது… கலைஞர்கள் அதிருப்தி!