Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை… ஏன் தெரியுமா?

Advertiesment
சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை… ஏன் தெரியுமா?
, சனி, 30 ஜனவரி 2021 (17:14 IST)
சிம்பு உடல் எடையைக் குறைத்து இப்போது ஒழுங்காக படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்து படங்களை முடித்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இனிமேல் வரிசையாக படங்களில் நடிப்பேன் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வரிசையாக 3 படங்களை தயாரிக்க இருப்பதாக இருந்தது. அதில் முதல் படத்தை சிம்புவின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்க உள்ளாராம்.

இதை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமூகவலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையையும் அவர் சிம்புவின் தாய் முன்னிலையில் அவரிடம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பற்றி மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் ஐசரி வேலன். ஆனால் அதில் ஒன்று கூட விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கானக் காரணம் என்ன என்பது இப்போது வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 எடுக்க விரும்பிய கௌதம் மேனனும் சிம்புவும் கொரில்லா படத்தின் தயாரிப்பாளர் விஜய் அவர்களின் தயாரிப்பில் அந்த படத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்கினர். அதற்கான அட்வான்ஸ் தொகையும் இருவருக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தை நீண்ட காலமாக தொடங்காததால் தயாரிப்பாளர் சிம்புவிடம் இருந்து அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்கிவிட்டார். ஆனால் அந்த கதைக்கான ஒப்பந்தம் இன்னும் தயாரிப்பாளர் விஜய்யிடமே இருப்பதால் ஐசரி கணேஷ் தயாரிப்பில் அந்த படத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து தோல்விப் படங்கள்… ஆனாலும் சம்பளத்தை ஏற்றிய விஷால் – இதுதான் காரணமாம்!